வினாத்தாள் கசிவு மூலம், கடினமாக உழைக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை, நிச்சயமற்றதன்மை ஏற்படுவதோடு, இவ்வாறு வினாத்தாளைக் கசிவால் ஆறு மாநிலங்களில் உள்ள 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஓஞ்சடரை வெளியிட்டு, அதில் கூறியிருப்பதாவது; ''06 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. வினாத்தாள் கசிவு என்பது, நமது இளைஞர்களுக்கு பெரும் ஆபத்தான பத்மவியூகமாக மாறியுள்ளது. வினாத்தாள் கசிவு மூலம், கடினமாக உழைக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை, நிச்சயமற்றதன்மை, அழுத்தம் ஏற்படுவதுடன் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதை தடுக்கிறது.'' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ''கடின உழைப்பை விட நேர்மையற்ற செயலே சிறந்தது என்ற தவறான செய்தியை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்கிறது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.'' என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ''நீட் வினாத்தாள் கசிவு, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி ஓராண்டு முடியவில்லை என்றும், நமது போராட்டத்திற்கு பிறகு, மோடி அரசானது அதற்கு தீர்வு எனக்கூறி ஒரு புதிய சட்டத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது எனவும், ஆனால், சமீபத்திய பல வினாத்தாள் கசிவுகள் அந்தச் சட்டம் தோல்வி அடைந்து விட்டது என்பதை நிரூபித்து உள்ளன'' என விமர்சித்துள்ளார்.
அத்துடன், ''இந்த தீவிரமான பிரச்னை என்பது தோல்வியை காட்டுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும், அரசுகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து கடுமையான நடவடிக்கையை எடுக்கும் போது மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்'' என கூறியுள்ளார். மேலும், ''இந்தத் தேர்வுகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பது என்பது நமது குழந்தைகளின் உரிமை. அதை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும்.'' என்று ராகுல் காந்தி அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.