திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 4 வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் ஆக இருக்கும் நிலையில் அடுத்த வருடம் தேர்தல் வர இருப்பதால் பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அதனை தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் முதலில் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் எல்லோருக்கும் எல்லாம் என்ற வடிவில் பட்ஜெட் இருக்கும் என்றார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் இலச்சினையில் ₹ என்ற அடையாளத்திற்கு பதிலாக ரூ. அடையாளம் போடப்பட்டது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எந்த ஒரு தேசிய சின்னத்தையும் அவமானப்படுத்துவதோ அல்லது இந்திய ஒருமைப் பாட்டிலும் இந்திய இறையாண்மையிலும் நாட்டின் வளர்ச்சியிலும் நாம் பெரும் மதிப்பு கொண்டவர்கள் என்று கூறினார். மேலும் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் நிலையில் தற்போது எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வர தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.