TN Budget 2025 LIVE : `1% பதிவுக் கட்டணம் குறைப்பு டு 40,000 பணியிடங்கள்!' - தமிழக பட்ஜெட்டின் முழு விவரம்!
Vikatan March 14, 2025 09:48 PM
உயர்க் கல்வி திட்டங்கள்..! கல்லூரி மாணவிகளுக்கு கணினி..! மகளிர் தொழில் முனைவோர்! 1% பதிவுக் கட்டணம் குறைப்பு..! அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பு... பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய..! 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்! புராதன கட்டடங்கள்..! திருவான்மியூர் - உத்தண்டி 4 வழித்தட உயர்மட்டச் சாலை! 1000 ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி! ரூ.1051 கோடியில் 5256 குடியிருப்புகள்! 10 லட்சம் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் உதவி! சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம்! 1125 மின் பேருந்துகள்! தனுஷ்கோடியில் பூநாரை பறைவைகள் சரணாலயம்! இயற்கை எரிவாயு பேருந்துகள்! கோவளம் - நீர்தேக்கம் அனைத்து மாநகராட்சியிலும் முதல்வர் படைப்பகம்! சென்னையில் சீராக குடிநீர் திட்டம்!

``சென்னையில் அனைத்து நீர்பகிர்மான நிலையங்களையும் இணைப்பதன் மூலம் அனைத்துப் பகுதிக்கும் சமமான நீர் வழங்கப்படுவதை உறுதி செய்யப்படும். இதற்கான ரூ.2423 கோடி செலவில் சுற்றுக்குழாய் திட்டம் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சி ரூ.200 கோடி, கோவை மாநகராட்சி ரூ.120 கோடி, திருச்சி மாநகராட்சி ரூ.100 கோடி, திருப்பூர் மாநகராட்சி 100 கோடி என நகர்புற நிதிப்பத்திரங்கள் திரட்டுவதின் மூலம் மாநகராட்சி உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றிட தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.” - பட்ஜெட்டில் அறிவிப்பு..!

இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்! மதுரை, கடலூர், திருச்சி...! தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்வு! சென்னை அறிவியல் மையம்! முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்! மகளிர் உரிமைத் திட்டம் - ரூ. 13,807 கோடி ஒதுக்கீடு பள்ளிகளுக்கு என்ன அறிவிப்பு..!

2000 பள்ளிகளுக்கு 160 கோடி மதிப்பில் கணிணி ஆய்வகங்கள், 880 உயர் தொழிற்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தவும், திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2025-26 ஆண்டில் 1,721 முதுகலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமணம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.

மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய புதியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காததால் ரூ.2157 கோடி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி, வஞ்சித்திருக்கிறது. ஆனாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதால் மாநில அரசே தன் சொந்த ஆதாரத்திலிருந்து அந்தக் தொகையை விடுவித்து செலவழித்துவருகிறது.

நூலகங்கள் அமைக்க பள்ளி கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

`கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்’

``வாகனப்போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ நீளத்துக்கு மேம்பாலம் ரூ,310 கோடி மதிப்பிலும், கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ.70 கோடி மதிப்பிலும் அமைக்கப்படும்.

``கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4,132 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

வரும் நிதி ஆண்டில் முடிக்கப்பட வேண்டிய பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நகராட்சி, பேரூராட்சியில் 6,483 கி.மீ சாலைகள் ரூ.3750 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியில் ரூ.486 கோடி மதிப்பீட்டிலும், கோவை மாநகராட்சியில் ரூ.200 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகராட்சியில் ரூ.130 கோடி மதிப்பீட்டிலும் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும்" - தங்கம் தென்னரசு

கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு, இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள்மீட்பு நிலையம், திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி ரூ.3,450 கோடி திட்டக்காலத்துக்கான மதிப்பீட்டில் வழங்கப்படும்.

தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.

அடையார் நதியை மீட்டெடுத்து சீரமைக்கும் திட்டம் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டிருக்கிறது. 30 மாத காலத்துக்குள் பணி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

அன்புச்சோலை : 25 இடங்களில் முதியோர் பகல்நேர பராமரிப்பு மையம்! `ரூ. 3,796 ஊதியத்தை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருக்கிறது’

``அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி கிராம திட்டத்தின் கீழ் 2329 கிராம ஊராட்சிகளில் ரூ.1,087 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டில் 27.11.2024 முதல் 11.3.2025 வரை வேலை செய்த தொழிலாளர்களுக்கான ரூ. 3,796 ஊதியத்தை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருக்கிறது.” - தங்கம் தென்னரசு

சென்னை: மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள்..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 7 மழை நீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்கா அமைக்க ரூ.88 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆகிய ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நடைபாதைகள், பூங்காங்கள் போன்ற நதிக்கரை மேம்பாட்டு திட்டம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கனவு இல்லம்: ஊரக பகுதிகளில் ஒரு லட்சம் புதிய வீடுகள்!

கடந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட 1 லட்சம் வீடுகள் கட்டும் பணி அனைத்து மாவட்டத்திலும் விரைவாக நடந்து வருகிறது. 2025-26-ம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் - ரூ.2200 கோடி

``முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6,100 கி.மீ கிராமச் சாலைகள் ரூ.2,100 கோடி செலவில் மேம்படுத்தப்படும். கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின் தொடர் பராமரிப்புக்காக மாநிலநிதிக்குழு மாணியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், இந்த ஆண்டு ரூ.120 கோடி விடுவிக்கப்படும்.” - தங்கம் தென்னரசு.

பழைய வீடுகளுக்கு பதிலாக...!

சீரமைக்க இயலாக பழைய வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டப்படும் திட்டம்.

25,000 வீடுகளுக்கு ரூ, 600 கோடு ஒதுக்கீடு!

மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்?

மகளிர் நலம் காக்கும் திட்டத்துக்காக ரூ.13,870 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த புதுமைப் பெண் திட்ட அறிமுகத்துக்குப் பிறகு, உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 19 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. வரும் நிதி ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த 420 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பெண்களின் முன்னேற்றத்துக்காக 10,000 சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்படும். சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படிருக்கிறது. மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும். புதுமைப் பெண், தமிழ்புதல்வர் ஆகிய திட்டங்களை உயர் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்காகவும் திட்டமாக விரிவுபடுத்தப்படும்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து மேலாண்மை ஆகியப் பணிகளை வழங்க உரிய பயிற்சிகள் வழங்கி ஊர் காவல்படையில் ஈடுபடுத்திட திட்டமிடப்பட்டிருக்கிறது.

சென்னைக்கு அருகில்... புதிய நகரம்!

2025-2026-ம் ஆண்டுடிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில் சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் அமைக்கப்படும் என்றும் சென்னையுடன் அந்த புதிய நகரத்தை இணைக்க விரிவான போக்குவரத்து வசதிகள் செய்யப்படும் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் ரூ.6,858 கோடி மதிப்பில் நடைபெற்றுவருகிறது. நாட்டிலேயே அதிக நகரமாயமாதல் அதனுடன் சவால்களை சந்தித்துவரும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவருகிறது. சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதியில்ருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் புதிய நகரம் சென்னைக்கு அருகில் அமைக்கப்படும்.

2000 ஏக்கர் பரப்பரவில் அமைக்கப்படும் அந்த நகரத்தில் ஐடி பார்க், மால், கம்பெனிகள், பேங்க், இன்சூரன்ஸ் கம்பெனி, ஷாப்பிங் மால் போன்றவைகள் அந்த நகரத்தில் அமைக்கப்படும். மெட்ரோ, பேருந்து, சாலை என போக்குவரத்தையும் உருவாக்கப்படும். இந்த நகரம் அமைக்கும் பணியை விப்கோ நிறுவனம் விரைவில் தொடங்கும்.

`இனி சிங்கப்பூர், துபாய், மலேசியாவிலும் தமிழ் புத்தக கண்காட்சி!’

``அறிவை பரவலாக்கும் சென்னை பன்னாட்டு புத்தக் கண்காட்சி, அனைத்து மாவட்டத் தலைநகரிலும் நடத்தப்படும் புத்தக் கண்காட்சியைப் போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, திருவனந்தபுரம் போன்ற நகரங்களிலும், சிங்கப்பூர், துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் தமிழ் புத்தக்கண்காட்சி இந்தாண்டு முதல் நடத்தப்படும். அதற்கான முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அயலக தமிழர்நல வாரியமும், தமிழ்மொழி, நாட்டுபுறக் கலைகளை பயிற்றுவிக்கும் 100 ஆசிரியர்கள் மூலம் நேரடி வகுப்புகள் நடத்த ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.” - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள்!

``அகரம் மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். உலக அரங்கில் தமிழர் நாகரீகத்தை பறைசாற்றும் வகையில், கீழடி, தெலுங்கனூர், வெள்ளலூர், ஆதிச்சனூர், மணிக்கொல்லை, கரிவலம்வந்தநல்லூர், பட்டணமருதூர், நாகப்பட்டனம் ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்படும். தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ள 7 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.” - தங்கம் தென்னரசு

``காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விவான ஆழ்கடல் அகழாய்வு நடத்தப்படும். ஈரோடு நொய்யல் அருங்காட்சியகம் அமைக்க ரூ.25 கோடி, ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ.21 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்படும். எலும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவழி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

மாமல்லபுரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும். மரபுசார் கட்டிடக் கலை காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.40 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.”

உலகத்தமிழ் ஒலிம்பியாட் - ரூ.1 கோடி பரிசுத்தொகை

``தமிழ் மொழி, பண்பாடுகளை உலகத் தமிழ் இளைஞர்கள் புரிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு, இந்திய நகரங்களிலும், உலக நாடுகளிலும் பயிலும் மாணவர்கள் பங்குபெறும் வகையில் ஒலிம்பியாட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.1கோடி வழங்கப்படும்.”

`மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள்’

``பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முன்னணி மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்மொழி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இதுவரை திருக்குறள் 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் 28 மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்க்கப்படவிருக்கிறது. இது நடந்துமுடிந்தால் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்ட நூலாக ஐநா-வால் அங்கீகரிக்கப்பட்ட நூலாகவும் திருக்குறள் மாறிவிடும். எனவே அதற்காக தமிழ்நாடு அரசு ரூ.133 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அரசி திட்டமிட்டிருக்கிறது. அதற்காக ஆண்டுக்கு 100 நூல்கள் என்ற அடிபப்டையில் 5 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கான முதற்கட்ட தொகையாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

" - அமைச்சர் தங்கம் தென்னரசு

`எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழி நடத்துவோம்’ - தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு தன் பட்ஜெட் உரையில், ``தமிழ்நாட்டின் உரிமையக் காக்க முதல்வர் காட்டும் உறுதியை நாடே உற்றுநோக்குகிறது. கல்வி, சுகாதாரம், வேளாண்மை தொழிலில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அதற்காக 100 ஆண்டுகளுக்கு முன்பே விதைப் போட்டது. இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு. எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழி நடத்துவோம். பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு நடைபோடுகிறது. வறுமை ஒழிப்பு, கல்வி, மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு அரசு செயல்படுகிறது"எனக் குறிப்பிட்டார்

அதிமுகவினர் வெளிநடப்பு! தமிழ்நாடு சட்டமன்றம்

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 9:30 மணியளவில் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை தொடங்கினார். ஆனால், ஆரம்பத்திலேயே அதிமுக டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச கோரிக்கை வைத்தது. கோரிக்கை மறுக்கப்படவே அமளியில் ஈடுபடத் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களை அமரக்கூறி வலியுறுத்திவருகிறார். எனினும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு! முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக, முதல்வர்ஸ்டாலின், 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற தலைப்பில் வெளியிட்ட, பட்ஜெட்டுக்கான முன்னோட்ட வீடியோ தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் ரூபாய்க்கான லோகோவுக்கு பதிலாக `ரூ’ எனும் எழுத்து குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பாஜக உறுப்பினர்கள் கண்டித்து வருகிறார்கள்.

இன்று காலை 9 மணி அளவில், மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், இன்று சட்டமன்றத்தில் தென்னரசு தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மாறிய குறியீடு - கிளம்பிய விவாதம்!

இன்று தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட் தொடர்பான அறிவிப்பில், ரூபாய்க்கான லோகோ-வுக்கு பதிலாக தமிழில் `ரூ’ என அச்சிடப்பட்டிருந்தது. இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

17-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம்! அமைச்சர் தங்கம் தென்னரசு

பட்ஜெட் தாக்கல் நிகழ்வு முடிந்ததும், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன அலுவல்களை எடுப்பது போன்றவைகள் குறித்து முடிவுவெடுக்கப்படும்.

சனிக்கிழமை , வேளாண்மை பட்ஜெட் தாக்கல் நடைபெறும். 17-ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான் விவாதம் நடைபெறும். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால், தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க அரசு அடுத்த ஆண்டு தேர்தலை சந்திப்பதற்கு முன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் நிறைவு பட்ஜெட் இது. எனவே, இந்த பட்ஜெட் கூடுதல் கவனம் பெறுகிறது.

இந்த ஆட்சியின் இறுதி பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காலை 9:30 மணிக்கு தொடங்கும் இந்த பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் கடந்த ஆண்டுக்கான வரவு, செலவு, வாங்கிய கடன், கொடுத்த வட்டி போன்ற தகவல்களை தெரிவிக்கப்படும். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருப்பதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும்தான் தாக்கல் செய்ய முடியும். அதனால், இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையிலான திட்டங்கள் இடம்பெற வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

மேலும், சென்னையில் இந்த பட்ஜெட்டை 100 இடங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.