தமிழ்நாடு டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1000 கோடி மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் தொடர்பாக கடந்த ஆறாம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் அமலாக்க துறையினர் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக டாஸ்மாக் அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான நபர்கள் மதுபான ஆலைகள் மற்றும் பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன குறிப்பாக சென்னை எழும்பூரில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இரண்டு தளங்களில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டாஸ்மாக் தொடர்பாக நடைபெற்ற இந்த அமலாக்கத்துறை சோதனை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போடப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் மூன்று விதமான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மது ஆலைகள் தங்களுடைய மது விற்பனைக்காக டாஸ்மாக் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாகவும், மூத்த டாஸ்மாக் அதிகாரிகள் டாஸ்மாக் ஊழியர்கள் இடமாற்றம் மற்றும் பதவி வழங்குவதற்காக லஞ்சம் பெற்றது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் போக்குவரத்து டெண்டர்கள்,பார் லைசன்ஸ் டென்டர்கள், மது ஆலைகளுக்கு சாதகமான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக கூடுதலாக பத்து ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை பாட்டில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்பட்டது தொடர்பாக ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களில் இருந்து டாஸ்மாக் கடைகளில் போக்குவரத்திற்காக போடப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. டெண்டர்களில் விண்ணப்பித்தவர்கள் தொடர்பான விவரங்களும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராஃப்ட் கொடுக்கப்பட்ட விவரங்களும் ஒன்றாக இல்லை என தெரியவந்துள்ளது. குறிப்பாக இதில் போக்குவரத்திற்காக 100 கோடி ரூபாய் அளவில் டாஸ்மாக் வருடாந்திரத்திற்கு கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பார் டெண்டர் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது குறிப்பாக விதிமுறைகளை மீறியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெண்டர் விண்ணப்பித்தவர்கள் தொடர்பாக முழு தகவல் இல்லாமல் ஜிஎஸ்டி, பான் கார்டு உள்ளிட்ட தகவல் இல்லாமல் அவர்களுக்கு இறுதி டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மது ஆலைகள் அதிகாரிகளும் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளும் தொடர்பு இருப்பதும் டென்டரில் சாதகமாக இருப்பதற்காகவும், சப்ளையில் சாதகமாக இருப்பதற்கும் செயல்பட்டது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் ஊழல் தடுப்புச் சட்டத்திற்கு உட்பட்டு உள்ளது மோசடியில் மது ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனையில் பெரிய அளவு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எஸ்என்ஜே கால்ஸ்,அக்கார்ட், SAIFL,சிவா டிஸ்டிலரீஸ் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது அது மட்டுமல்லாது மது பானங்களுக்கு பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேவி பாட்டில் கிரிஸ்டல் பாட்டில் மற்றும் ஜிஎல்ஆர் ஃபோல்டிங் ஆகிய ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நிறுவனங்களுடன் இணைந்து மது ஆலைகளும் சேர்ந்து கணக்கில் வராத பணம் மற்றும் சட்ட விரோதமாக பணம் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. தெளிவாக திட்டமிட்டு கணக்கில் வராத பணத்தை திட்டங்களை வகுத்து உருவாக்கியது தெரிய வந்துள்ளது. பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள் தான் இந்த மோசடியில் பெரும் பங்காற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மதுபான நிறுவனங்கள் செலவினங்களில் முறைகேடு செய்து போலியான விற்பனை ஆவணங்களை தயாரித்து பாட்டில் நிறுவனங்கள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டாஸ்மாக்கில் இருந்து சப்ளை ஆர்டர்களை பெறுவதற்கு மோசடி செய்யப்பட்ட நிதி அனைத்தும் லஞ்சமாக கொடுக்கப்படுகிறது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக மதுபான நிறுவனங்களிடம் அதிக விலைக்கு பாட்டில்களை விற்பனை செய்வது போல் போலியான கணக்குகளை காட்டி பின்னர் அந்த ரசீது களுக்கான பணத்தை பெற்ற பிறகு, மீண்டும் சட்டவிரோதமாக கணக்கில் காட்டப்படாத ரொக்க பணமாக மது பான ஆலை உரிமையாளர்களிடம் பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. பாட்டில் உருவாக்கும் கம்பெனிகள் மூலமாக மது ஆலை நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு சுமார் 1000 கோடி அளவிற்கு பாட்டில் நிறுவனங்கள் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிகள் மூலமாக போலியான நிதி அறிக்கைகள் மற்றும் அதிக அளவிலான பண பரிமாற்றங்கள், தொடர் ஏய்ப்புகள் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அதிக லாபம் சம்பாதிப்பதற்காக கணக்கில் வராத பணத்தை உருவாக்கி போலீஸ் செலவினங்களை கணக்கில் காட்டி ,மோசடி செய்வதை அமலாக்கதுறை கண்டுபிடித்துள்ளது. இந்த மோசடியில் தொடர்பான பாட்டில் நிறுவன அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரையும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது