“இது போதும் எனக்கு இது போதுமே” தேவையானதை சேர்த்துட்டேன்… அஜித் குறித்து ஆதிக் போட்ட பதிவு…!!
SeithiSolai Tamil March 15, 2025 03:48 AM

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.

கடந்த 28ஆம் தேதி படத்தின் டீசர் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதியில் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. மேலும் புக்கிங் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அஜித் சாருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நாட்களும் மறக்க முடியாதவை. வாழ்க்கை முழுவதுக்கும் தேவையான நினைவுகளை சேகரித்து வைத்து விட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.