#featured_image %name%
“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல – இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”
நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான ‘₹’ ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது.
திமுகவிற்கு (@arivalayam) உண்மையிலேயே ‘₹’ உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு @INCIndia தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
‘₹’ – இந்தச் சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.
மேலும், ரூபாய் என்ற வார்த்தை ‘வெள்ளியால் செய்யப்பட்ட’ அல்லது ‘வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்’ என்று பொருள்படும் ‘ருப்யா’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, ‘ரூபாய்’ என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது. இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக ‘ரூபாய்’ அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன.
‘ரூபாய்’ என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.
ரூபாய் சின்னம் ‘₹’ என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. UPI ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.
இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல – இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது.
பாஜக., மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன்ரூபாய் குறியீடு என்பது சர்வதேச அளவில் இருக்கும் பல கரன்சி குறியீடுகளுக்கு இணையாக இந்திய திருநாட்டிற்கு ஒரு குறியீடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இது அமெரிக்க டாலரின் குறியீட்டுக்கு போட்டியிடுவதற்கு தான் தவிர தமிழ்நாட்டோடு போட்டியிடுவதற்கு அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா ??
2010 ல் உங்கள் திமுக மத்திய ஆட்சியில் இருந்த போது தான் ரூபாய் கான இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா??
அப்போதெல்லாம் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?
ரூபாய் என்ற வார்த்தை மூலச் சொல் தமிழ் அல்ல அது சமஸ்கிருத வார்த்தை என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது அதைத்தானே பயன்படுத்த முன் வந்திருக்கிறீர்கள்…
சத்தியமேவ ஜெயதே என்ற உபநிடத முழக்கம் தான் நீங்கள் அரசு முத்திரைகளில் பயன்படுத்தும் வாய்மையே வெல்லும் என்கிற வாசகம்!!!
உபநிடதம் ஹிந்துத்துவா இல்லையா??
அதை இனிமேல் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்ல உங்களால் முடியுமா?
சிங்கங்களை கொண்ட அரச முத்திரை என்பது அசோகரின் சின்னம் என்பது உங்களுக்கு தெரியுமா?
நம் தேசிய கீதம் ஜன கன மன வங்க மொழியில் பாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ?
அது தமிழ் இல்லை என்பதால் உங்கள் திமுக அரசாங்கம் தேசிய கீதத்தை புறக்கணிக்க முடியுமா??
இதற்கு உங்களிடம் இருந்து பதில் நான் எதிர்பார்க்க மாட்டேன்…
ஏனென்றால் நாங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்
ரா. சரத்குமார், பாஜக.,இந்திய ரூபாய்க்கான அடையாள சின்னத்தை மாற்றும் செயல் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ‘₹’ என்கிற குறியீட்டுக்குப் பதிலாக தமிழில் ரூபாய் என்பதைக் குறிக்கும் வகையில் ரூ என்கிற தமிழ் எழுத்தை திமுக அரசு பயன்படுத்தி இருப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
இந்திய ரூபாய்க்கு தனி சின்னங்களை நமது தேசத்திலுள்ள 28 மாநிலங்களும் தங்களுக்கென தனித்தனியாக வடிவமைத்து பயன்படுத்த ஆரம்பித்தால், என்ன ஆகுமென்று சிந்தித்து பார்க்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களும், டாலருக்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவோம் என்று சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது.
அமெரிக்காவின் டாலர் மற்றும் பிற நாட்டு யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது போல இந்திய ரூபாய்க்கான தனி சின்னம் உருவாக்க கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 5 காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு, ஒரு பொது போட்டியை அறிவித்து பெறப்பட்ட 3,331 வடிவமைப்புகளில், ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் MLA திரு.மருதூர் N.தர்மலிங்கம் அவர்களின் மகன் திரு.த.உதயகுமார் அவர்கள் வடிவமைத்த புதிய குறியீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு 15.07.2010 அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்திய ரூபாய்க்கு அடையாள குறியீடு வெளியிடப்பட்ட 2010 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியுடன் திமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்ததுடன், மத்திய அமைச்சரவையில், தயாநிதி மாறன், S.S.பழனிமாணிக்கம், அ.ராசா. T.R. பாலு, S.ரகுபதி. K.வெங்கடபதி, V.ராதிகாசெல்வி ஆகிய 7 திமுக அமைச்சர்கள் ஆட்சியிலும் அங்கம் வகித்துள்ளனர் என்பதையும், தமிழ்நாட்டில் அப்போது கலைஞர் முதலமைச்சராக பதவி வகித்தார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போதே ஏன் திமுகவினர் இந்த அடையாள சின்னத்தை ஏற்றுக்கொண்டீர்கள்? தமிழை ஊக்குவிக்க ‘ரூ”எழுத்தை இப்போது பயன்படுத்துகிறீர்கள் என்றால், அன்று முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் அவர்களுக்கு தமிழ்மீது பற்று இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?
தேவநாகரி எழுத்தான Ra மற்றும் ரோமன் எழுத்தான R ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டு, Rs அல்லது INR என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், ₹’ என்ற குறியீட்டால் இந்திய ரூபாயை குறித்து அதன் மேற்பகுதியில் உள்ள 2 கோடுகள் தேசியக்கொடியையும், சமம் என்ற அடையாளத்தையும் குறிப்பதாக தெரிவித்துள்ளார் உதயகுமார்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதே, ரூபாயின் அடையாளச் சின்னத்தை மாற்றுபவர்கள் விரைவில் ரூபாய் நோட்டுகளையும் மாற்றும் திட்டம் கொண்டுள்ளார்களா? தமிழ்நாட்டை தனிநாடாக மாற்றும் எண்ணம் என்று இதை எடுத்துக் கொள்வதா?
மக்கள் நலனுக்கானது தான் அரசாங்கம் நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்துவது தான் அரசாங்கம். மக்களின் தேவைகள் ஏராளம். ஆனால், தமிழ்நாடு அரசு மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு செயலாற்றுவது போல் தெரியவில்லை. அதை விடுத்து இன்று வாக்கு அரசியலுக்காக மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிர்ப்பு என்று சொன்னால் எப்படி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவீர்கள்? திமுகவின் இத்தகைய செயலை அதன் கூட்டணி கட்சியான தேசிய கட்சி காங்கிரஸும் சிந்திக்க வேண்டும்.
இந்த குறியீடுகளை மாற்றிவிட்டால் தமிழகத்தின் கடன் உயர்வதை தடுக்க முடியுமா? இதனால் மக்களுக்கு என்ன பயன்? இது மக்கள் நலன் காக்கின்ற செயலும் அல்ல. மக்களுக்கு நேரடியாக உதவுகின்ற செயலும் அல்ல. ஏற்கெனவே ஒப்புக்கொண்டு நடைமுறையில் உள்ள செயலை மாற்றுகிறீர்கள் என்று சொன்னால், வேறு எவற்றையெல்லாம் மாற்ற எண்ணம் இருக்கிறது என்று தெள்ளத்தெளிவாக தெரிவித்தால், உங்கள் மனநிலையை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இந்திய ஒருமைப்பாட்டை, தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்₹ அடையாளம் நீக்கம்: கலைஞர் நூற்றாண்டு நாணயங்களை திமுக வீசி எறிந்து விடுமா?
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில் அதை திசை திருப்பும் நோக்குடன் இத்தகைய நாடகங்களை திமுக அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
எதையாவது செய்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும்; எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை திமுக மறந்து விடுகிறது. ₹ அடையாளம் நேற்றோ, அதற்கு முன்நாளோ வெளியிடப்பட்டது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் 2010-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி திமுக அங்கம் வகித்த மன்மோகன்சிங் அவர்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் வெளியிடப்பட்டது. அப்போது அதை திமுக ஆதரித்தது.
₹ அடையாளத்தை வடிவமைத்தவர் ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். அந்த அடையாளத்தை வடிவமைத்ததற்காக 2010ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினார். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தை தான் திமுக இப்போது நீக்கியிருக்கிறது.
அவ்வளவு ஏன்? கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ₹.100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை திமுக அரசு மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் ₹ அடையாளம் தான் இடம் பெற்றிருந்தது. அதற்கான அந்த நாணயத்தை திமுக வெறுக்கவில்லை. மாறாக, ரூ.4470 விலை கொண்ட நாணயத்தை திமுகவினரிடமே ரூ.10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பார்த்தது திமுக.
தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ₹ அடையாளத்தை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கலைஞர் நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
News First Appeared in