உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், ஆசிபாபாத் பகுதியில் வசித்து வருபவர் சதிஷ் (45). இவரின் மனைவி உடல்நலக்குறைவை எதிர்கொண்ட நிலையில், நேற்று கிளினிக் ஒன்றுக்கு சென்றார். அங்கு தர்மேந்திரா (வயது 42) என்ற ஊழியர், சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது, சிகிச்சை பெறவந்த பெண்ணிடம், தர்மேந்திரா பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன பெண்மணி, நடந்த விஷயம் குறித்து வீட்டுக்கு சென்றபின்னர் கணவரிடம் கூறியுள்ளார். மேலும், தர்மேந்திரா தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:
3 பேர் கைது
இதனால் ஆத்திரமடைந்த சதிஷ், தனது மச்சான்கள் விவேக், விக்ரம் ஆகியோருடன் கிளினிக் சென்றார். அங்கு தர்மேந்திராவை சரமாரியாக தாக்கினர். மேலும், சதிஷ் உச்சகட்ட ஆத்திரத்தில் தர்மேந்திராவின் பிறப்புறுப்பை வெட்டி இருக்கிறார்.
அலறித்துடித்த தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமாகி, டெல்லிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதிஷ், விக்ரம், விவேக் ஆகியோரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: