தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ரூ. 22 கோடியில் நொய்யல் அருங்காட்சியகம் என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளது.
அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ.21 கோடியில் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்பு திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில், பழந்தமிழ் நூல்களை மின் நூலாக மாற்ற ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுதவிர, மேலும் 45 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தகக் காட்சி நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 500 தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.