``ரூ.130 கோடி சொத்து இருக்கு... ஆனா, சும்மா இருக்க கூடாது'' - அமெரிக்காவில் கார் ஓட்டும் கோடீஸ்வரன்
Vikatan March 15, 2025 04:48 PM

'டீல்ஸ் தமாக்கா' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் வினீத் அமெரிக்காவில் தான் சந்தித்த ஊபர் கார் டிரைவரை பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து வினீத், "இன்று ஊபர் டிரைவர் ஒருவரை சந்தித்தேன். அவர் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனத்தின் சீனியர் நிர்வாகியாக முன்னர் பணிபுரிந்துள்ளார். அமெரிக்காவில் அவருக்கு 1.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு வீடுகள் உள்ளது. பல்கேரியா நாட்டில் 3.5 மில்லியன் யூரோஸ் உள்ளது. அவரது 3 பிள்ளைகளும் செட்டில் ஆகிவிட்டனர். ஒருவர் லண்டனில் வழக்கறிஞராக இருக்கிறார். மீதி இரண்டு பேர் ஐரோப்ப யூனியனில் கால்பந்து அணியில் உள்ளனர்.

அமெரிக்காவில் இரண்டு வீடுகள், பல்கேரியாவில்...

அமெரிக்காவில் அவரது மனைவி வேலை செய்துக்கொண்டிருப்பதால், இன்னமும் அவர் அமெரிக்காவிலேயே இருக்கிறார். அவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 15 மில்லியன் டாலர்கள் (130 கோடி ரூபாய்). ஆனாலும் வேலை செய்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு போர் அடிப்பதால், ஊபர் டிரைவர் வேலையை செய்துக்கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

ஒருவேளை, உங்களுக்கு இவ்வளவு சொத்து இருந்து Bore அடித்தால் இவரை மாதிரி என்ன வேலை செய்வீர்கள்?!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.