தமிழ் சினிமாவில் தன்னுடைய அயராத உழைப்பின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி பின்னர் தமிழ்நாட்டின் முதல்வர் என்ற உயரத்தை அடைந்தவர் எம்ஜிஆர். குடும்ப கஷ்டத்திலும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து மாபெரும் நடிகராக உயர்ந்த எம்ஜிஆர் பின்னர் திமுகவில் இணைந்து மக்கள் நல பணிகளை செய்தார். பின்னர் திடீரென மனக்கசப்பு ஏற்பட்டதால் திமுகவிலிருந்து வெளியேறிய எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியினை தொடங்கினார். அதிமுக என்ற அரசியல் கட்சியினை எம்ஜிஆர் தொடங்கிய நிலையில் முதல் தேர்தலிலேயே வெற்றி கண்டார். அவர் உயிரோடு இருக்கும் வரை அவர் தான் தமிழகத்தின் முதல்வராக இருந்தார்.
இந்நிலையில் தற்போது எம்ஜிஆர் பற்றிய ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாரத ரத்னா மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் 7-ம் நம்பருக்கும் ஒரு பொருத்தம் இருக்கிறது. அதாவது கடந்த 1917 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் பிறந்த நிலையில், 1927 ஆம் ஆண்டு சினிமா பயணத்தில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த 1947 ஆம் ஆண்டு எம்ஜிஆர் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய நிலையில், கடந்த 1957 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 1967ஆம் ஆண்டு முதல் முதலாக சட்டமன்ற உறுப்பினரான எம்ஜிஆர் கடந்த 1977 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். கடந்த 1987 ஆம் ஆண்டு தமிழகத்தில் 10 வருடங்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்த எம்ஜிஆர் இந்த மண்ணை விட்டு மறைந்தார். மேலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து மறைந்த எம்ஜிஆருக்கும் 7-ம் நம்பருக்கும் இடையே இப்படி ஒரு பொருத்தமா என்ற தகவல் ஆச்சரியமானதாக இருக்கிறது.