தெலுங்கானா மாநிலத்தில் சைதாபாத் பகுதியில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் கோவில் கணக்காளரை இரசாயண தூள் கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணக்காளர் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நபர் அவரின் மேல் ஒரு மர்ம இரசாயனப் பொருளை வீசியுள்ளார்.
கணக்காளர் அதிர்ச்சியடைந்து கத்தியதால், கோவிலில் இருந்த பக்தர்களும் பணியாளர்களும் அவரை மீட்க ஓடோடி சென்றனர்.தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். படுகாயம் அடைந்த கணக்காளர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மர்மநபர் கணக்காளரை இரசாயணத்தால் தாக்கி தப்பியோடுவது தெளிவாக பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்குப் பயன்படுத்திய இரசாயனம் என்ன என்பதும் இன்னும் உறுதியாக தெரியவில்லை.