எச்சரிக்கை!கொளுத்த போகுது வெயில்!!! தமிழகத்தில் வெப்பநிலை எகுறும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
Seithipunal Tamil March 16, 2025 03:48 AM

சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் கூறியுள்ளதாவது,"தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ( மார்ச்15) வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதில் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.இன்று 15 முதல் 17ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

அதன் பிறகு இரண்டு நாட்கள் சற்று குறையலாம்.சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதில் அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியதை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மேலும் மீனவர்களுக்கு தனிப்பட்ட எச்சரிக்கை என ஏதுமில்லை" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.