வாட்ஸ் ஆப்பில் கிரியேட் ஈவென்ட் வசதி அறிமுகம்..!
Newstm Tamil March 16, 2025 06:48 PM
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வாட்ஸ்ஆப்பில் மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகமாகவுள்ளது.
வாட்ஸ்ஆப்பில் குரூப் சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டுவதற்கு கிரியேட் ஈவென்ட் என்ற வசதி ஏற்கெனவே இருந்து வருகிறது. இந்நிலையில் தனிப்பட்ட சாட்களிலும் கிரியேட் ஈவென்ட் வசதி என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சோதனையில் இருந்த இந்த புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்கு அறிமுகமாகியுள்ளது.