பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் சப்தகிரி. தற்போது ஹீரோவாக படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் பெல்லி காணி பிரசாத். அபிலாஷ் ரெட்டி கோபிடி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியங்கா சர்மா ஹீரோயினாக நடித்திருக்கிறார். காமெடி கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் சப்தகிரி படத்தில் கதாநாயகியை தேர்வு செய்ய பல தகவல்களை எதிர்கொண்டேன். புது முகங்கள் அதிகம் அறியப்படாத நடிகைகள் என பல ஹீரோயின்கள் என்னோடு இணைந்து பணியாற்ற மறுத்துவிட்டார்கள். மேலும் என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக நடிகை பிரியங்கா சர்மாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார். தமிழ் போன்ற நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த ஹீரோவாக நடிப்பவர்கள் பல அவமானங்களை சந்திக்க நேரிடுவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.