தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் ரூ. 1,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று பா.ஜ.க. போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.
இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். அத்துடன்அவர் மாலை 07 மணிக்கு தான் விடுதலை செய்யப்பட்டார்.
இதனிடையே, டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் நாடகமாடுவதை விடுத்து மேல் நடவடிக்கை எடுங்கள் என்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்ன் இந்த போராட்டம் பா.ஜ.க. - தி.மு.க. நடத்தும் நாடகவும் என்றும், இரு கட்சிகளும் புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும்' தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடுப்பு காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அண்ணாமலைசெய்தியாளர்களை சந்தித்த போது, தவெக வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை கூறுகையில், தமிழக வெற்றிக் கழகம் பள்ளிக்குழந்தைகள் போல் அமர்ந்துகொண்டு அரசியல் செய்துகொண்டிருக்கின்றன. சினிமா படப்பிடிப்பில் இருந்துகொண்டு அரசியல் செய்வார்களா?.
சினிமா படப்பிடிப்பில் இருந்துகொண்டு பாட்டுப்பாடிக்கொண்டு, நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு விஜய் அரசியல் செய்துகொண்டிருக்கிறார். எனக்கும் பேச தெரியும். தவெகவும் எல்லையை கடக்கக்கூடாது. தவெகவை நானும் மரியாதையாகத்தான் பேசுகிறேன். அறிக்கை விடும்போது அதற்கு காரணம் இருக்க வேண்டும். நான் என்ன நடிகர் விஜய் போன்று நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு, நடமனாடிக்கொண்டு அங்கிருந்து அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறேனா?
நான் களத்தில் இருந்து போராடிக்கொண்டிருக்கின்றேன். களத்தில் இருந்து பேசுகிறேன். விஜய்க்கு இது என்ன ஒர்க் பிரம் ஹோம் அரசியலா? விஜய்க்கு 50 வயதில்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எண்ணம் தோன்றியதா? 30 வயதில் எங்கு போனார்? 50 வயதில் புத்தர் எழுப்பிவிட்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வர சொன்னாரா?
விஜய் யாருடைய B டீம். நாடகம் யார் செய்கிறார்கள் பா.ஜ.க. செய்கிறதா? விஜய் செய்கிறாரா? நாடகம் செய்வது விஜய், தமிழக வெற்றிக் கழகம். தி.மு.க.வின் B டீம்தான் விஜய். இதை நான் உறுதியாக கூறுகிறேன். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று தொடங்கப்பட்ட ரகசிய திட்டம்தான் தமிழக வெற்றிக் கழகம்.
சகோதரர் விஜய் வரம்பு மீறி பேசும்போது எனக்கும் பேசத்தெரியும். மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும். உங்களுக்கு என்ன தெரியும் மக்கள் கஷ்டத்தை பற்றி? நீங்கள் சினிமாவில் சிகிரெட் குடிப்பீர்கள்.? மது குடிப்பீர்கள்..? இதையெல்லாம் செய்துகொண்டு டாஸ்மாக் பற்றி பேச விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது...?
மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்ன? ஒரு குல்லாவை போட்டுக்கொண்டு நான் சிறுபான்மையினர் பக்கம் இருக்கேன் என்று ஒருநாள் இப்தான் விருந்து வைத்தால் எல்லாம் வந்துவிடுமா? எனக்கும் பேச தெரியும். சிறுவர்கள் போன்று பா.ஜ.க.விடம் வந்து சண்டை போடக்கூடாது' என்று த.வெ.க.விஜய்யை சரமாரியாக அண்ணாமலை தாக்கி பேசியுள்ளார்.