அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில்; பள்ளி மாணவர்களுக்கான சிபிஎஸ்இ, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, அனைத்து தேர்வு மையங்களிலும் நாள்தோறும் காலை 7 முதல் மாலை 5.30 வரை தடையற்ற வகையில் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்கள் காரணமாக மாதந்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி சென்னையில் காலை 9 மணி முதல் 2 மணி வரையில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற்பகல் 2 மணிக்கு பிறகு பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கம் போல் மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில், ரெட்டில்ஸ் பகுதியில் தர்காஸ் சாலி, கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், ஸ்ரீ பால விநாயகர் நகர், புது நகர் 3ஆவது தெரு மற்றும் 5ஆவது தெரு, மல்லிமநகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.