ஒரு வழியா!!!பூமிக்கு பயணத்தை தொடங்கிய சுனிதாவின் புதிய புகைப்படம்...! - நாசா
Seithipunal Tamil March 19, 2025 01:48 AM

கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ய சென்றனர்.

அவர்களின் பயணம் 10 நாளாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கடந்த 10 மாதங்களாக விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. அவர்களை அழைத்து வர 'space x ' நிறுவனத்தின் 'falcon 9' ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம், விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.

இந்திய நேரப்படி:

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலமாக பூமிக்கு சுனிதா வில்லியம்ஸ் தமது குழுவினருடன் புறப்பட்டார்.இது இந்திய நேரப்படி நாளை (மார்ச் 19) அதிகாலை 3.27 மணிக்கு அமெரிக்காவிலுள்ள புளோரிடாவில் தரையிறங்குகின்றனர்.

இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினரின் 9 மாத பயணம் முடிவுக்கு வருகிறது. மேலும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவருடன் நிக் ஹாவுக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் பூமிக்கு திரும்புகின்றனர்.

நாசா:

இப்பயணம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு நடக்கும் நிகழ்வுகளை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.அவ்வகையில், சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் பூமி திரும்புவதற்கான பயண ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பான வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

மேலும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி, பூமிக்கு வந்துசேரும் காட்சிகள் அனைத்தையும் எப்போதும்போல நாசா நேரடி ஒளிபரப்பு செய்வது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.