தற்போதைய காலத்தில் பல்வேறு காரணங்களால் முடி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால், பெண்கள் முடியை வளர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், எந்த உணவுகளை சாப்பிடுவதால் முடி வளரும் என்பது குடித்து இந்தப் பதிவில் காண்போம்.
பெண்களுக்கு கூந்தல் உறுதியாகவும் நீளமாகவும் வளருவதற்கு வைட்டமின் சத்துகள் மிகவும் முக்கியமானது. அதுமட்டுமல்லாமல் இரும்புச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் முடி உதிர்வதை தடுத்து முடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாக வளரவும் வழி வகை செய்யும்.
அதிலும் குறிப்பாக இரும்பு சத்து குறைபாடு ஒரு முக்கிய காரணம். முடி கருமையாகவும் மற்றும் நீளமாகவும் வளர இரும்புசத்து இன்றியமையாதது. ஒரு மனிதருக்கு 90,000 முதல் 1,50,000 வரை தலைமுடிகள் இருக்குமாம்.
முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர கீழ்க்காணும் உணவு வகைகளை உங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*முட்டை
*கீரை
*ஆளிவிதை
*பாதாம்
*மீன்
*சர்க்கரைவள்ளி கிழங்கு
*கேரட்