கோவை: கஞ்சா விற்பனையில் 22 வயது இளைஞர்கள்; தவறி விழுந்ததில் கை-கால் முறிவு.!
Tamilspark Tamil March 19, 2025 09:48 AM

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜேஜே நகர் பகுதியில், கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இதனிடையே, இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனைக்காக வந்திருந்த நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 1.3 கிலோ கஞ்சா, 3 கிராம் மெத்தப்பட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், காவல் துறையினரின் விசாரணையில் தீபன்ராஜ் (22), ஹிருத்திக் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:

இவர்கள் இருசக்கர வாகனத்தில் அதிகாரிகள் பிடிக்கச் சென்றபோது, தவறி இழுத்து ஒருவர் கையையும், மற்றொருவர் கால் எலும்பை முறித்துக்கொண்டனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.