ஏப்ரல் 1, 2025 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு உறுதியான ஓய்வூதியத்தை பெறும் விதமாக தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மத்திய அரசால் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு ஓய்வூதிய திட்டமாகும். இதன் மூலம் பெறப்படும் பணம் பங்கு சந்தை மற்றும் கடன் சந்தை செயல் திறனைப் பொறுத்து மாறுபடும். ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சமாக ரூ.10000 உறுதியான ஓய்வூதியத்தை வழங்குவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வுதிய திட்டத்தை தேர்வு செய்யலாம். ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒருங்கிணைந்த ஓய்வுதிய திட்டத்தின் உறுதி செய்யப்பட்ட பென்ஷன் தொகையை பின்வரும் பே-அவுட் சூத்திரத்தை பயன்படுத்தி கணக்கிட முடியும்.
ஊதியம் = 50% X (கடந்த 12 மாத அடிப்படை ஊதியத்தின் கூட்டுத்தொகை / 12)
-- ஒருவரின் சேவை காலம் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த பார்முலா பொருந்தும்.
-- ஒருவேளை ஒருவர் 25 ஆண்டுகளுக்கு குறைவான பணியில் இருந்தால் பே-அவுட் விகிதத்தில் மாற்றங்கள் இருக்கும்.
-- அதேநேரம் ஒரு ஊழியர் 25க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகு தானாகவே முன்வந்து ஓய்வு பெற்றால், அவருக்கான ஊதியம் அசல் ஓய்வு தேதியிலிருந்து தொடங்கும்.
எடுத்துக்காட்டாக முழு உறுதி செய்யப்பட்ட ஊதியம் 25 ஆண்டுகளுக்கு மேல் சேவை ஓய்வு பெறும் நேரத்தில் ஒரு ஊழியருக்கு சராசரி அடிப்படை ஊதியம் 12 லட்சமாக இருக்கும் என வைத்துக் கொள்வோம்.
குறிப்பிட்ட சூத்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் சராசரி அடிப்படை ஊதியத்தொகை 12 ஆல் வகுக்க வேண்டும். எனவே கடந்து கடந்த 12 மாத சராசரி அடிப்படை ஊதியம் ஒரு லட்சம் ஆகும். பின்னர் அதை 50% ஆல் பெருக்க வேண்டும். இதன் மூலமாக ஊழியர் 50000 ஓய்வு ஊதியத்தை பெறுவார்.
25 ஆண்டுகளுக்கு குறைவான சேவை இருக்கும் பட்சத்தில் நாம் விகிதாசார காரணியை சேர்க்க வேண்டும். உதாரணமாக ஒருவர் 20 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி எனில் அவருக்கான விகிதாசாரம் 20/25 = 0.8 ஆக இருக்கும்.
எனவே ஊதியமானது 50% X 1000X 08 = 40000 ஆக இருக்கும். ஓய்வு பெறுவோருக்கு ஒருவர் ரூ.15000 அடிப்படை ஊதியமாக பெற்றிருந்தால், அவரின் ஓய்வூதியம் ரூ.7500 ஆக இருக்கும்.
ஆனால் இது குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட தொகையை விட குறைவு என்பதால் அவர்களுக்கு ரூ.10000 ஓய்வூதியம் கிடைக்கும். எப்படி என்றால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக ரூ.10000 ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும்.