“2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா”…? வெயிட் பண்ணுங்க… சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா விஜயகாந்த்… ஷாக்கில் இபிஎஸ்…!!
SeithiSolai Tamil March 19, 2025 03:48 PM

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்ன கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பிரேமலதா விஜயகாந்த் 2026 மார்ச் 18-ஆம் தேதி என்னுடைய அடுத்த பிறந்தநாள் அன்று கூட்டணி பற்றி தெளிவாக சொல்கிறேன் எனக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி அதிமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்பி தொகுதிகள் மட்டுமே ஒதுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ராஜ்ய சபா சீட் பற்றி ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் தேமுதிகவினர் தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என பேசி வருவதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.