நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மையம் ஒதுக்கப்படாத தேர்வர்கள் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்ற நிலையில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் தேர்வர்கள் சிரமத்தில் உள்ளனர்.