தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களை கூடுதலாக அமைக்க கோரி சட்டப்பேரவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதலளித்து பேசிய தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கு அனுமதி கிடைத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. தேவையை விட அதிகமாக சுகாதார நிலையங்களை அமைத்து, இலக்கை எட்டிவிட்டீர்கள், இனிமேல் ஆரம்ப சுகாதார நிலையம் கேட்காதீர்கள் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. இருந்தாலும் 50 ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை வைத்து உள்ளோம் எனவும் கூறினார்.