மார்ச் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டெல்லியில் பகவந்த் மானை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் சட்ட அமைச்சர் ரகுபதி. உடன் எம்.பி.க்கள் கனிமொழி, எம்.எம்.அப்துல்லா, கனிமொழி என்விஎன் சோமு ஆகியோர் சென்றிருந்தனர்.
சந்திப்புக்கு பிறகு எம்.பி.க்களுடன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, முதல்வர் பகவந்த் மான் முதலமைச்சர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று சென்னைக்கு வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இது அமைச்சர் ரகுபதி தலைமையிலான குழு என்பதால், அவர் பேசிய பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார் கனிமொழி எம்.பி.