தன் சகோதரர்களுடன் வாக்குவாதம் செய்த பின்னர் சோழன் ரிசப்ஷனுக்கு சம்மதிக்கிறார்.
'அய்யனார் துணை' சீரியலின் நேற்றைய எபிசோடில் சோழன் - நிலா ரிசப்ஷனுக்காக வீட்டில் அனைவரும் மும்முரமாக ஏற்பாடுகள் செய்கின்றனர். அய்யனார் துணை வீட்டின் தலைவரான நடேசன் தூண்டுதலின் பேரில் தான் இந்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால் சோழனுக்கு இது பற்றி எதுவுமே தெரியாது. அவருக்கு சப்ரைஸாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவரின் சகோதரர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை.
இதனிடையே நடேசனின் தங்கை மகள் கார்த்திகா நிலாவுக்கு ரிசப்ஷனுக்கு தேவையாக ப்ளவுசை தைக்க உதவி செய்கிறார். தனக்குத் தெரிந்த டெய்லரிடம் கொடுக்க, இந்த விஷயம் அவரின் அம்மாவுக்குத் தெரிய வருகிறது. ஏற்கனவே தன் அண்ணன் குடும்பத்தை அடியோடு வெறுக்கும் அவர், கார்த்திகாவைக் கடிந்து கொள்கிறார்.
கார்த்திகா தன் அம்மாவிடம் இருந்து தப்பித்து ஒடி வந்து சேரனிடம் நிலாவுக்கான உடையைத் தருகிறார். இதுவொரு சாதாரண காட்சிபோல்தான் இருந்தது. ஆனால் கார்த்திகா மிக இயல்பாகச் சேரனிடம் தன் காதலை வெளிப்படுத்தியது எதிர்பாராத திருப்பம்.
நடேசனின் மூத்த மகனான சேரனுக்குத் திருமணம் நடக்காமல் நீண்ட காலம் தள்ளிப் போகிறது. இதனால் ஊர் மக்களின் கேலி கிண்டல்களுக்கு அவர் ஆளாகிறார். ஏதோ ஒரு காரணத்திற்காக நடேசனின் தங்கை ஒட்டுமொத்தமாகச் சேரன் மற்றும் அவரின் சகோதரர்களை வெறுக்கிறார். ஆனால் அவரின் மகள் கார்த்திகாவுக்குச் சேரன் மீது காதல்.
நடேசனின் இரண்டாவது மகன் சோழனின் திடீர் திருமணத்தால் மூத்த மகனான சேரனுக்குத் திருமணம் நடக்காது என ஊரார் பேசுவதைக் கேட்டு கார்த்திகா வருத்தப்படுகிறார்.
கார்த்திகா சேரனிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறார். நிலாவின் ரிசப்ஷன் உடையைக் கொடுத்துவிட்டு சேரனிடம், "எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். ஆனால் உங்களுக்காக வீட்டை விட்டு வர பயமா இருக்கு. என் அப்பா எனக்காகத்தான் வெளிநாட்டுல கஷ்டப்படுறாரு. என் வீட்ல உங்கள கல்யாணம் பண்ணிக்க கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்க. ஆனா உங்க கூட மணமேடைல பொண்ணா நிக்கணும்னு ஆசையா இருக்கு. உங்கள ரொம்ப பிடிக்கும் மாமா“ என்று இயல்பாகச் சொல்கிறார்.
சேரனால் இந்த வார்த்தைகளைத் தாங்க முடியாமல் அதிர்ந்து போய் நிற்கிறார். கார்த்திகா பேசிய வார்த்தைகளால் மெளனம் ஆகிறார். இந்த காட்சி ஒரு அற்புதமான Proposal காட்சி என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், சேரன் - கார்த்திகா காதல் டிராக்கை மக்கள் ரசிக்கத் தொடங்கியுள்ளனர்.
கார்த்திகா சொன்னதைச் சேரன் எப்படி எடுத்துக் கொள்வார்? நிலா இந்த ரிசப்ஷன் ஏற்பாடுகளைப் பார்த்து எப்படி ரியாக்ட் செய்வார் என்பது அடுத்து வரும் எபிசோடுகளில் தெரியும்.
இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் சோழன் - நிலா வீடு திரும்புகின்றனர். அவர்கள் இருவரும் இந்த ரிசப்ஷன் ஏற்பாடுகளைப் பார்த்து அதிர்கின்றனர். சோழன் தன் சகோதரர்களிடம் சண்டை போடுகிறார். அதன் பின்னர் ஒரு வழியாக ரிசப்ஷனுக்கு சம்மதித்து புதிய ஆடையை அணிந்து கொள்கிறார். ஆனால் நிலா சம்மதிக்க மறுக்கிறார். ஒரு 2 மணி நேரம் சினிமா ஷூட்டிங்னு நெனச்சி என் பக்கத்துல நில்லுங்க எனச் சோழன் நிலாவிடம் மன்றாடுகிறார்.
சேரன் அப்போது அங்கு வந்து தன் குடும்பச் சூழலை விளக்குகிறார். ``இந்த ஊர் மக்கள் உங்கள வாழ்த்த வரல. இந்த குடும்பத்துலலாம் எப்படி நல்லது நடக்கும் என விமர்சிக்க வந்துள்ளனர். எங்க குடும்பத்துக்காக வந்து நில்லுமா” என்று கண்ணீருடன் நிற்கிறார்.
சேரனின் கண்ணீரைப் பார்த்து நிலா மனம் மாறுவாரா என்பது நாளை தெரியும் .
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : |
Part 02: |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks