ஐபிஎல் இன் 18 ஆவது டி20 தொடர் ஆனது இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது வரும் மார்ச் இருபத்தி இரண்டாம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணியானது தன்னுடைய தொடக்க ஆட்டத்தை வரும் 23ஆம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இதனை அடுத்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னை அணி வீரர்களும் பயிற்சியில் களமிறங்கியுள்ளனர். அந்தவகையில் பயிற்சியின்போது வேகப்பந்து வீச்சாளர் பதினரா வீசிய பந்தை தோனி ஹெலிகாப்டர் ஷார்ட் அடித்து சிக்ஸரை பறக்க விட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.