இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் வெளிநாடுகள் பட்டியல்! முதல் இடத்தில் எந்த நாடு தெரியுமா?!
Seithipunal Tamil March 20, 2025 07:48 AM

பல்வேறு கலாசார பண்பாடுகள், இயற்கை எழில், மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தியாவுக்கு உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர். அதேபோல், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

அதில், உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள், வேலை, கல்வி, மற்றும் சுற்றுலா காரணமாக இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகள் குறித்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில்,
* முதல் இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது, ஆண்டுக்கு 72 லட்சம் இந்தியர்கள் இந்த நாடு செல்வதாகக் கூறப்படுகிறது.
* இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா, இங்கு 31 லட்சம் இந்தியர்கள் பயணிக்கின்றனர்.
* மூன்றாவது இடம் அமெரிக்காவுக்கு, ஆண்டுக்கு 21 லட்சம் இந்தியர்கள் பயணிக்கின்றனர்.
* நான்காவது இடத்தில் தாய்லாந்து, ஆண்டுக்கு 15 லட்சம் இந்தியர்கள்.
* ஐந்தாவது இடம் சிங்கப்பூருக்கு, ஆண்டுக்கு 14 லட்சம் இந்தியர்கள் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.