அஜீத்குமார் விடாமுயற்சி படத்துக்கு அப்புறமா நடித்து ரிலீஸ் ஆக உள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் படம் அமர்க்களமாக வந்துள்ளதாக சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.
படத்துல அஜீத் முற்றிலும் மாறுபட்ட 3 கெட்டப்புல வந்து கலக்குகிறார். அஜீத் ரொம்ப நம்பி இருக்குற படமும் இதுதான். விடாமுயற்சி படம் முதலில் ரிலீஸ் ஆக நீண்ட நாளாக இழு இழுன்னு இழுத்துக் கொண்டு இருந்தபோது முதல்ல அஜீத் குட் பேட் அக்லியைத் தான் ரிலீஸ் ஆக்கச் சொன்னாராம்.
இன்னொரு விஷயம் இந்தப் படத்தோட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜீத்தின் தீவிர ரசிகர். அவர் அஜீத்தை ரசித்து ரசித்து எடுத்த படம். கமலின் தீவிர ரசிகராக இருந்து அவரை ரசித்து ரசித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம்தான் விக்ரம். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
good bad ugly
அதே போல ஆதிக், அஜீத் காம்போவுக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன் மார்க் அண்டனி படத்தை இயக்கினார். அது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அஜீத், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் வர்மா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். தற்போது குட் பேட் அக்லி படத்தின் புது அப்டேட் ஒன்று வந்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் தமிழ்நாடு வெளியீட்டை ரோமியோ பிக்சர்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அது மட்டும் அல்லாமல் எந்த ஒரு இடை விநியோகஸ்தர்களும் இல்லாமல் இந்தப் படத்தை நேரடியாகவே வெளியிட தெளிவாகத் திட்டமிட்டுள்ளார்களாம். படத்தை ஏப்ரல் 10ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிட திரையரங்குகளைக் கைப்பற்றும் வேலை முழுவீச்சாக நடந்து வருகிறதாம்.