ஐபிஎல் என்பது வெறும் விளையாட்டு அல்ல, இப்போது அது பணம் கொழிக்கும் மிகப்பெரிய தொழிலாக மாறிவிட்டுள்ளது. இதற்கான விளம்பர வருவாய் மட்டும் இந்த ஆண்டு சுமார் 10,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளை டாடா நிறுவனம் நடத்த இருக்கும் நிலையில், இந்த போட்டி தொடர் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இதன் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஜியோ ஸ்டாருக்கு விளம்பரங்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 20 முன்னணி பிராண்டுகள் விளம்பர ஒப்பந்தங்களை உறுதி செய்துள்ளதாகவும், இன்னும் அதிகம் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை பெற முன்வரும் முன்னணி பிராண்டுகள் கடுமையாக போட்டியிடுகின்றன. இதனால், ஐபிஎல் விளம்பர மார்க்கெட்டிங் ஒரு போர்க்களமாக உருவெடுத்துள்ளது. ஆண்டுதோறும் ஐபிஎல் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இது வெறும் விளையாட்டைத் தாண்டி ரசிகர்கள் மூலமாக பிராண்டுகளை அறிமுகப்படுத்தும் ஒரு பெரிய வணிக தளமாக மாறியுள்ளது என ஜியோ ஸ்டார் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் வருமானம் சுமார் 7,000 கோடி ரூபாய் எனக் கணிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 10,000 கோடியை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வணிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிஜிட்டல் விளம்பரங்கள் முதல் மைதான விளம்பரங்கள் வரை பல்வேறு விளம்பரத்தளங்கள் இருப்பதனால், இந்த ஆண்டு ஐபிஎல், வணிக வரலாற்றில் மிகப்பெரிய வணிக திருவிழாவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜியோ ஸ்டாரில் இணைந்துள்ள முக்கிய பிராண்டுகள் குறித்த தகவல் இதோ:
Fintech & BFSI: SBI, PhonePe, GPay, Mutual Funds Sahi Hai
Fantasy Sports & Gaming: My11Circle, Dream11, PokerBaazi, Zupee
FMCG & Beverages: Thums Up, Campa, Campa Energy, Amul, Joy Cosmetics
Fashion & Home Improvement: Allen Solly, Jaquar Bath + Light, Kent Kuhl Fans
Automotive & Paints: TVS, Asian Paints
Technology & Digital: Google Search