வரும் 22 ஆம் தேதி ஐபிஎல் சீசன் தொடங்க இருக்கிறது. இதனையடுத்து சீசனை வெற்றிகரமாக தொடங்குவதற்காக பஞ்சாப் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தலைமையில் பூஜை செய்து வழிபட்டுள்ளனர். அதாவது அணிக்கு வெற்றி சேர்க்கும் விதமாக பூஜை செய்து உள்ளார்கள. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்த பூஜையில் ஆழ்ந்த ஈடுபாட்டோடு கலந்து கொண்டார். பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஐபிஎல்லில் பிரம்மாண்ட வெற்றி நோக்கி பயணிக்க தயாராகி வருகிறது.
வரும் மார்ச் 27ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து முதலாவது ஆட்டத்தில் விளையாட இருக்கிறது பஞ்சாப் கிங்க்ஸ். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் அணியில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளத. இந்த நிலையில் ரசிகர்களின் ஆதரவை நாடி இந்த அணி தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்திருக்கிறது.