முன்னாள் இந்திய கேப்டன், பிரபல இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்து ஒரு நகைச்சுவையான விளம்பரத்தில் நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். EMotorad எனும் மின்சார சைக்கிள் நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த விளம்பரத்தில், தோனி, ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்தின் ரன்விஜய் சிங் கதாபாத்திரத்தைப் போல் நடித்து கவனம் ஈர்த்தார்.
குறிப்பாக, ரன்பீரின் பிரபலமான நடையை, தோனி மின்சார சைக்கிளுடன் மீண்டும் செய்ததோடு, அவரது “சுனைஇயே டே ரஹா ஹை முஜ்ஹே, பேஹ்ரா நஹீ ஹூ மேன்” என்ற வசனத்தையும் உச்சரித்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது.
இயக்குனர் வங்கா, தோனியின் நடிப்பை பாராட்டி, இது சூப்பர் ஹிட்டாகும் எனவும் உறுதியளித்தார். இதற்கிடையில், தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சிக்காக முன்கூட்டியே முகாமில் சேர்ந்துள்ளதோடு, மார்ச் 23ஆம் தேதி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளார். CSK-க்கு இது 6வது ஐபிஎல் கோப்பையை வெல்லும் இன்னொரு வாய்ப்பு என்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.