நாளை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர கூட்டம்... முக்கிய முடிவுகள் குறித்து விவாதம்!
Dinamaalai March 21, 2025 10:48 AM

நாளை மார்ச் 22ம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர உயர்மட்ட குழு கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் அக்டோபர் மாதம் நடக்கும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. போட்டிக்கான இடம், அட்டவணை எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

உலகக் கோப்பை போட்டிக்கான இடத்தை தேர்வு செய்ய ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்கப்படுகிறது. இதே போல் 2025-26-ம் ஆண்டு உள்ளூர் போட்டிக்கான அட்டவணையும் கூட்டத்தில் இறுதி செய்யப்படுகிறது.

ஐ.பி.எல். போட்டியின் போது, மதுபானம், புகையிலை சம்பந்தமான விளம்பரங்களை தடை செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை இந்திய கிரிக்கெட் வாரியத்தை அறிவுறுத்தியது. அது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.