04-வது பெண் குழந்தைக்கு 'ஹிந்த்'என பெயர் சூட்டியுள்ள துபாயின் பட்டத்து இளவரசர்..!
Seithipunal Tamil March 28, 2025 07:48 AM

துபாய் பட்டத்து இளவரசரான ஷே க் ஹம்தான், தனக்கு பிறந்த 04-வது பெண் குழந்தைக்கு 'ஹிந்த்' என பெயர் சூட்டியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

ஷேக் ஹம்தான் 2008-இல் துபாயின் இளவரசரானார். அவர் மேலும் ஐக்கிய அமீரக துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார். ஷேக் ஹம்தானுக்கும் அவரது மனைவியான ஷேகா ஷீக்கா பின்தே சைத் அல் மக்தூம்-க்கும் ஏற்கனவே ராஷிதா, ஷெய்கா மற்றும் முகமது என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது 04-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு 'ஹிந்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இவர் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் ஆகியோரின் இரண்டாவது மகனாவார். 

'ஹிந்த்' என்பது அரபு பாரம்பரியத்தில் ஒரு பிரபலமான பெண் பெயர் என்றும் இது வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஷேக் ஹம்தான் தனது சமூக பதிவில் குழந்தையின் பிறப்பை குறிப்பிட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.