குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் சார்பில் தேயிலை தூள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி துவங்கியுள்ளது.
குன்னூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் சார்பில் தேயிலை தொழிலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலப்பட தேயிலை தூள் தேயிலைத் தூளின் குறித்தும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை வாரியத்தின் சார்பில் இரண்டு நாள் தேயிலை தூள் கண்காட்சி நேற்று தூங்கியது.
இதில் 15 அரங்குகள் அமைக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலப்படத் தேயிலைத் தூள்களை கண்டறிவது குறித்து காணொளி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் தலைமை வகித்து அரங்குகளை திறந்து வைத்தார், வாரிய துணைத் தலைவர் ராஜேஷ் சந்தர் முன்னிலை வகித்தார்.தேயிலை வாரிய உறுப்பினர் தனஞ்சயன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா,டேன்டி பொது மேலாளர் அசோக்குமார், இன்கோ சர்வ் பொது மேலாளர் பரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து தேயிலை வாரிய இயக்குனர் முத்துக்குமார் கூறுகையில் :- கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் சிம்ஸ் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர துவங்கியுள்ளதால், தென்னிந்திய தேயிலைத் தூளின் சிறப்பு அம்சங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன்,கலப்பட தேயிலை தூள்களையும் எளிதில் கண்டறியும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரங்குகள்அமைக்கப்பட்டுள்ளது.இது போன்ற விழிப்புணர்வு கண்காட்சிகள் வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் தேயிலை வாரியத்தின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாமல் இத்தொழிலை சார்ந்துள்ள அனைவரும் அதிகளவில் பயன்பெறுவார்கள் என கூறினார்.