“பணியின் இறுதி நாள்”… ஓய்வு பெறும் நாளில் விருந்து… கடைசி நாளே இறப்பு நாளாக மாறிய சோகம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!
SeithiSolai Tamil April 03, 2025 03:48 AM

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா ரயில்வே லைனில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஆலைகளுக்காக தனியாரால் இயக்கப்படும் ரயில்வே தடத்தில் நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று , பார்கத் எம்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 ரயில்வே பணியாளர்கள், 4 CISF படைவீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து நடத்திய விசாரணையில் 2 ரயில்களுக்கும் இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் நிலக்கரி ஏற்றி வந்த ரயிலின் லோகோ பைலட் கங்கேஸ்வர் மால். இவர் மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர். இவர் நேற்றைய தினத்துடன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தனது கடைசி பயணத்தின் போது தான் அவருக்கு இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.

நேற்றைய பணி முடிந்ததும் இரவில் ஓய்வு பெறுவதால் வீட்டில் விருந்து ஏற்பாட்டில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக நடந்த அசம்பாவிதத்தால் கங்கேஸ்வர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கங்கேஸ்வர் குடும்பத்தினர் கூறியதாவது, கடைசியாக கங்கேஸ்வர் தான் சீக்கிரம் வந்து விருந்தில் கலந்து கொள்வதாக போனில் கூறியுள்ளதாகவும், ஆனால் தற்போது தங்களின் மொத்த உலகமும் நொறுங்கிவிட்டது எனவும் தங்களது வருத்தத்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.