கொடூரம்..!!”சிகிச்சையில் தாய்” … தயிர் சாதம் சாப்பிட்டு இறந்த 3 குழந்தைகள்…!! விசாரணையில் அம்பலமான நாடகம்!
SeithiSolai Tamil April 03, 2025 11:48 PM

தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியில் 3 குழந்தைகளை கொலை செய்த தாயையும், அவரது காதலன்னையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த மார்ச் 28ஆம் தேதி அன்று அமீன்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 குழந்தைகள் மயக்கமான நிலையிலும், அவர்களது தாய் ராஜிதா(30) வயிற்று வலியிலும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தைகள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் ராஜிதாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையா(50) என்பவருடன் ராஜிதாவிற்கு திருமணம் ஆகி உள்ளது. ஆனால் அவரது திருமண வாழ்க்கையில் ராஜிதா சந்தோஷமாக இல்லை. அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக ராஜிதாவுக்கு, தனது 10ம் வகுப்பு நண்பரான சிவாகுமார்(30) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ராஜிதா தனது குழந்தைகளை விட்டு விலக வேண்டும் என்று சிவாகுமார் கூறியுள்ளார். அதன்படி மார்ச் 27ஆம் தேதி அன்று ராஜிதா டவலை வைத்து தனது குழந்தைகளை கொன்றுள்ளார். பின்னர் அன்று இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் குழந்தைகள் தயிர் சாதம் சாப்பிட்ட பிறகு மயக்கம் அடைந்து விட்டதாக கூறியுள்ளார். அதோடு அவருக்கும் அதிகமான வயிற்று வலி இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சென்னையா, அவர்கள் 4 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் குழந்தைகள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து காவல்துறையினர் குழந்தைகள் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் குழந்தைகள் மூன்று பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் ராஜிதா மற்றும் அவரது காதலனையும் கைது செய்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.