“பெத்த தாயை கொடூரமாக தாக்கி தரையில் தரதரவென இழுத்துச் சென்ற மகன்”… வேடிக்கை பார்த்த மருமகள்… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
SeithiSolai Tamil April 04, 2025 05:48 PM

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் ராயிகோட் நகரின் மொஹல்லா பாங்க் காலனி பகுதியில், 85 வயதான குர்னாம் கௌர் என்பவர் தனது மகன் ஜஸ்வீர் சிங் மற்றும் மருமகள் குர்ப்ரீத் கௌருடன் வாழ்ந்து வந்தார். கடந்த மார்ச் 28ஆம் தேதி அவரை தாக்கும் காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது மகள் ஹர்ப்ரீத் கௌர் தனது செல்போனில் பார்த்தபோது, தாயின் நிலைமை பரிதாபமாக இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

வீடியோவில், குர்னாம் கௌர் கட்டிலில் அமர்ந்திருந்தபோது, மகன் தொடர்ந்து பலமுறை கன்னத்தில் அடித்ததும், கழுத்தை நெறித்தும், மயக்கம் அடைந்த நிலையில் தரையில் இழுத்துச் செல்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ஹர்ப்ரீத், “மனுக்தா தீ சேவா” எனும் தன்னார்வ அமைப்பின் தலைவர் குர்ப்ரீத் சிங் அலியாஸ் மிந்து என்பவருக்குஅனுப்பினார். உடனடியாக அவரும் அவரது குழுவும் குர்னாம் வீட்டிற்கு சென்று, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதற்குப் பிறகு, மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் போலீசார் குர்னாமிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். தனது மகனும் மருமகளும் நீண்ட காலமாக தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், தனது மருமகளின் தூண்டுதலால் மகன் அடிக்கடி தாக்கி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். கடந்த மார்ச் 28 அன்று நடந்த தாக்குதலிலும் மருமகளின் தூண்டுதலே காரணமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஜஸ்வீர் சிங் மற்றும் குர்ப்ரீத் கௌர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.