“அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தீவிரவாதி”… டெல்லி திகார் ஜெயிலில் அடைப்பு..!!
SeithiSolai Tamil April 11, 2025 04:48 AM

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பயங்கர தீவிரவாதியான ராணாவுக்கு அமெரிக்க கோர்ட் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் ராணா இன்று சிறப்பு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தின் மூலம் அழைத்து வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரை இறங்கியதும் ராணாவிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தயாராக உள்ளனர்.

அந்த விசாரணையின் மூலம் இவருடைய வழக்கில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் இவரை பலத்த பாதிக்கப்புடன் டெல்லி திகார் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.