உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி துக்க விழாவாக மாறியுள்ளது. அதாவது மோனு கௌதம் என்பவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் மணமகள் தன் குடும்பத்தினருக்கு பிரியா விடை கொடுத்து காரில் அமர்ந்திருந்தார். அப்போது காரில் ஏறுவதற்காக சென்ற மணமகன் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் நிலைமை மோசமாக இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மணமகளின் குடும்பத்தினர் மணமகனுக்கு நோய் இருந்ததாகவும் ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட வரதட்சணை மற்றும் பொருட்களை திரும்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் முடிந்த உடனே மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.