பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
Top Tamil News May 14, 2025 07:48 PM

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் சண்டையை நிறுத்தவதாக அறிவித்தன. இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பு பிறகும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியநிலையில், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்பது நீதிக்கான உறுதிமொழி என்று பிரதமர் மோடி கூறினார். பயங்கரவாதிகளை அழிக்க நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழித்ததாக மோடி தெரிவித்தார். காஷ்மீரில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கைவிட்டு வெளியேறுவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழி இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி, பாதுகாப்பு 
விவகாரங்கள், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த உடன்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 4வது முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.