உத்தரபிரதேசம் அம்ரோஹா மாவட்டத்தின் ஃபயாஸ்நகர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், இரண்டு தலைமை ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களின் முன்னிலையில் மது அருந்தியதைக் காட்டும் வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்த் குமார் மற்றும் அருகிலுள்ள சுதாரி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் அனுபால் ஆகியோர் தினமும் பள்ளி வளாகத்திற்குள் வந்து, மாணவர்களை பொருட்படுத்தாமல் மது அருந்துவதாக கிராமவாசிகள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றை பொதுமக்கள் எடுத்துத் மாவட்ட நீதிபதி நிதி குப்தாவிடம் வழங்கினர்.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலர் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், இரண்டு ஆசிரியர்களும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். சமூக வலைதளங்களில் பரவும் அந்த வீடியோவில், இருவரும் வகுப்பறையில் மேஜை மீது மதுவை ஊற்றி அருந்தும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் இப்படி நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மெடிசன்கள் பலரும் அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.