பெண் ஒருவர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்கெட் பரிசோதகர் அவரிடம் டிக்கெட் காண்பிக்குமாறு கேட்டபோது அந்த பெண் உடனடியாக கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணிடம் டிக்கெட் காண்பிக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி கேட்டதனால் அந்த பெண்ணுக்கும் டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் ரயிலில் இருந்த மற்ற பயணிகளுக்கும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த இணையாவசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் என்ற பெயரில் விதிகளை மீறி வருகிறார்கள் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் ஒரு சிலர் பெண்கள் என்று அடையாளத்தில் தவறான காரியங்கள் நடப்பதற்கு ஆதரவு கொடுக்க முடியாது என்றும், இந்தியாவில் பெண்கள் குற்றம் செய்தால் ஆண் போலீசாரால் கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் இந்திய ரயில்வே இது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.