இதன் வாயிலாக ஆண்டுதோறும் 95,000 ரூபாயை விஷ்ணு சம்பாதித்து வருகிறார். கடந்த மாதம் 11ல், விஷ்ணுவுக்கு வருமான வரித் துறை அதிகாரிகளிடம் இருந்து நோட்டீஸ் வந்தது.
அதில், '2020 - 21ம் நிதியாண்டில் 10.61 கோடி ரூபாய் வருமானம் பெற்றதற்கு வருமான வரி செலுத்தவில்லை' என கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாரிடம் முறையிட்டபோது, அவரது புகாரை யாரும் ஏற்கவில்லை. இதையடுத்து, பட்டய கணக்காளரின் உதவியை விஷ்ணு நாடினார்.
முடிவில், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தனியார் நிறுவனம், விஷ்ணுவின் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கள் நிறுவனம் வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக இரண்டு மிகப்பெரிய வணிக பரிவர்த்தனைகளை விஷ்ணு பெயரில் செய்ததும் அம்பலமானது.
முதலில் 10.61 கோடி ரூபாய்க்கும், அடுத்ததாக 2.83 கோடி ரூபாய்க்கும் பணப்பரிவர்த்தனை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, பூந்தி மாவட்ட எஸ்.பி.,யிடம் விஷ்ணு புகாரளித்தார்.
பின்னர், இந்த வழக்கு சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, இரண்டாவது பரிவர்த்தனையான 2.83 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த வலியுறுத்தி விஷ்ணுவுக்கு இரண்டாவது நோட்டீஸ், வருமான வரித் துறையிடம் இருந்து கடந்த 30ம் தேதி வந்தது. இது குறித்தும் சைபர் கிரைம் போலீசாரிடம் விஷ்ணு தெரிவித்தார். அவரின் புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்திடம் தினக் கூலி வேலைக்காக ஆதார் மற்றும் பான் விபரங்களை விஷ்ணு அளித்திருந்த நிலையில், அங்கிருந்து அந்த ஆவணங்கள் கசிந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி செய்த மும்பை நிறுவனத்திடமும் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.