எத்தனையோ மாரத்தான் பற்றி கேள்விப்பட்டிருப்போம்..! “ஆனால் ரோபோட் பந்தயம் தெரியுமா”..? சீனாவின் வித்தியாசமான முயற்சி… வீடியோ வைரல்..!!!
SeithiSolai Tamil April 19, 2025 05:48 PM

சீனாவின் பீஜிங்கில் நடைபெற்று கடந்த ஓர் வித்தியாசமான ஹாஃப் மாரத்தான் (21 கிமீ) போட்டியில், 21 மனிதன் போன்ற ரோபோட்டுகள் மனிதர்களுடன் இணைந்து ஓடினர். பல பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ரோபோட் குழுக்களை இதில் பங்கேற்க அனுப்பியிருந்தன. சீன ஊடகங்கள் தெரிவித்ததாவது, இந்த ரோபோட்டுகளை தயாரிப்பதற்காக பல வாரங்களாக பயிற்சி மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்ததென கூறப்படுகிறது.

இது சாதாரண ஓட்டப்போட்டியாக மட்டும் அல்ல, ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவில் சீனா உலகையே வழிநடத்தும் நோக்குடன் மேற்கொண்ட ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் முன் உயர் தொழில்நுட்ப சாதனங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் எதிர்காலம் பற்றிய ஆர்வத்தை உருவாக்குவதே இவர்களின் நோக்கம். ஆனால், சில நிபுணர்கள் இதை உண்மையான செயற்கை நுண்ணறிவை காட்டும் சாதனை என அங்கீகரிக்க மறுக்கின்றனர். இது சாதாரண மெக்கானிக்கல் சகிப்புத்தன்மையின் காட்சியே தவிர, நடைமுறை பயன்பாட்டைக் காட்டாது என விமர்சிக்கின்றனர்.

 

இந்த ரோபோட் ஓட்டப்போட்டியில் பங்கேற்க சில முக்கிய நிபந்தனைகள் இருந்தன. ரோபோட்டுகள் மனித வடிவில் இருகால்களுடன் இருக்கவேண்டும், மேலும் 0.5 மீட்டர் முதல் 2 மீட்டர் உயரம் வரை இருக்கலாம். சக்கரம் கொண்டவை அல்லது பலகால்கள் கொண்டவை அனுமதிக்கப்படவில்லை. பேட்டரி மாற்றம் செய்யலாம், ஆனால் ஒவ்வொரு மாற்றத்துக்கும் 10 நிமிட தண்டனை வழங்கப்பட்டது. மூன்று மணி நேரத்திற்குள் ஓட்டம் முடிக்கவேண்டும் என்ற கடுமையான நேர வரம்பும் விதிக்கப்பட்டது. வெற்றியாளர்களுக்கு ரூ.58,000 வரை பரிசுத்தொகைகளும், தனித்திறமைக்கான சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.