அடக்கொடுமையே..! மறுபடியுமா…? “மகளின் மாமனாரோடு உல்லாசம்”… வீட்டை விட்டு ஓடிய தாய்… குமுறும் கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!
SeithiSolai Tamil April 19, 2025 09:48 PM

உத்திரபிரதேச மாநிலத்தில் நடக்கும் சமீபகால சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது சமீபத்தில் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையோடு தாயார் ஓடிப்போன நிலையில் திரும்ப வந்து வாழ்ந்தால் மாப்பிள்ளை ஓடுதான் வாழ்வேன் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்த பெண் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு மகளை திருமணம் செய்து வைப்பதாக கூறிவிட்டு அம்மாவை மணமகனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவமும் அரங்கேறியது.

இந்நிலையில் தற்போது ஒரு பெண் தன்னுடைய சம்மந்தியுடன் ஓடிப்போன சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாடன் மாவட்டத்தில் சுனில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 43 வயதில் மம்தா என்ற மனைவி இருக்கும் நிலையில் 4 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இவர்களுடைய மூத்த மகளுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சைலேந்திரா (46) என்பவரின் மகனுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பிறகு சைலேந்திராவுக்கு மம்தாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

சுனில் குமார் வீட்டில் இல்லாத போது பிள்ளைகளை வேறு அறையில் தங்க வைத்துவிட்டு மம்தா அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் சைலேந்திரா மற்றும் மம்தா இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இது தொடர்பாக சுனில் குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.