3 குழந்தைகளுக்கு தாயான பிறகும் கள்ளக்காதல் மோகம்… “கணவனை உதறிவிட்டு மகனுடன் குடும்பம் நடத்தும் பெண்”… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!
SeithiSolai Tamil April 20, 2025 03:48 AM

உத்தரப் பிரதேசம், மஜஃபர் நகரம் அருகேயுள்ள ‘திஸாங்’ கிராமத்தில் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் காதல் சம்பவம் ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது மூன்று குழந்தைகளுக்கு தாயான ஒரு 35 வயதுடைய பெண் ஒருவர், தனது அக்காவின் 26 வயது மகனை காதலித்து, கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அந்த பெண்ணின் கணவர் போலீசாரிடம் அளித்த புகாரில், தனது மனைவி “மீரட்டில் நடந்த ‘ப்ளூ டிரம்’ கொலை வழக்கு மாதிரிதான் உனக்கும் நடக்கும், எனக்குப் பின்னால் வந்தா” என மிரட்டியதாகக் கூறியுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி அவர் போலீசாரிடம் பாதுகாப்புக் கோரியுள்ளார். மேலும், அவர் கூறுவதற்கேற்ப, இருவரும் வீட்டிலிருந்து தப்பிய போது ரூ.40,000 பணமும் நகைகளும் எடுத்துச்சென்றுள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், மீரட் மாவட்டத்தின் மாவானா பகுதியில் அந்த பெண் தற்போது தனது உறவினருடன் வாழ்ந்துவருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி கணவனுடன் செல்லுமாறு அறிவுறுத்திய போதிலும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அவர் தன் மகன் முறையுள்ள வாலிபருடன் கணவனை உதறி தள்ளிவிட்டு ஓடிப்போய் குடும்பம் நடத்துவது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.