ஆனந்தி கர்ப்பத்தை வைத்து தற்போது சிங்கப்பெண்ணே தொடர் பரபரப்பாகச் செல்கிறது. இதற்கு யார் காரணம் என்பது தான் தொடரை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறது. அந்த வகையில் இன்று நடந்த எபிசோடின் சுருக்கம் இதுதான்.
ஆனந்தியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற விவாதம் அவளது தோழி ரெஜினா, காயத்ரி மற்றும் ஆனந்தி இடையே போய்க்கொண்டு இருக்கிறது.
தோழிகள் இருவரும் அன்புவின் மேல் சந்தேகம் கொள்கின்றனர். ஆனந்தி அதை மறுக்கிறார். மேலும் அன்பு ரொம்ப நல்லவர். அதை நான் நிரூபிச்சிக் காட்டுறேன்னு சவால் விடுகிறார். இந்த நிலையில் ஊரில் ஆனந்தியின் அப்பா அம்மாவிடம் முறைமாமன் சுயம்புலிங்கம் தகராறு செய்கிறான். அதேபோல ஆனந்தியின் அண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டு போனான் அல்லவா.
அந்த வகையில் அண்ணனின் மாமனாரும், மாமியாரும் வந்து ஆனந்தியின் அப்பா, அம்மாவிடம் தகராறு செய்து சாபம் இட்டுச் செல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க அன்புவும், ஆனந்தியும் மீண்டும் வேலைக்கு வருகின்றனர். நீண்டநாள் கழித்துப் பார்த்த சக ஊழியர்கள் ஆனந்தியிடம் பேச்சு கொடுக்கின்றனர். ஆனந்தியும் ஏதோ அப்செட் மூடிலேயே இருக்கிறாள்.
அப்போது கருணாகரன் ஆனந்தியைக் காபி போட்டு எடுத்து வரச் சொல்கிறான். ஆனந்தியின் காபியைக் குடித்ததும் மகேஷ் ஆனந்தி வந்ததைத் தெரிந்து கொண்டு பார்க்க வருகிறான். அங்கு ஆனந்தி அன்புவிடம் தான்; கொஞ்சம் மனம் விட்டு உன் தோளில் சாய்ந்தபடி பேச வேண்டும் என்று சொல்கிறாள். இதைக் கேட்டதும் இது கனவா, நனவா என தன் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறான் அன்பு.
அவர்கள் மதியம் லஞ்ச் டைமில் அனைவரும் சாப்பிடச் சென்றதும் குடோனில் சந்திக்கலாம் என முடிவு செய்கின்றனர். இந்த நிலையில் அவர்களைப் பார்க்க வரும் மகேஷ் மதியம் உங்க இருவருக்கும் வீட்டுல இருந்து சத்தான உணவு கொண்டு வரச் சொல்லி இருக்கேன். என் கூட தான் இன்னைக்கு உங்களுக்கு லஞ்ச்னு சொல்கிறான். இதற்கிடையில் மகேஷின் அம்மா எப்படியாவது மித்ராவை மகேஷூக்குக் கல்யாணம் கட்டி வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். அன்புவிடம் ஆனந்தி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அடுத்த எபிசோடில் காணலாம்.