பதைபதைக்கும் வீடியோ... அலறி அடித்து ஓட்டம் பிடித்த பக்தர்கள்… சரிந்து விழுந்த தேர்!
Dinamaalai April 20, 2025 03:48 AM

 

கர்நாடக மாநிலத்தில் தக்ஷிண கன்னட மாவட்டத்தில் முல்கி நகரில் அமைந்துள்ள பப்பனாடு துர்காபரமேஸ்வரி கோவிலில் பிரம்ம ரதோத்ஸவ விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில், கோவில் தேரின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் ஒன்று பிற்பகல் 2 மணிக்கு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேரின் மேற்பகுதி பிளந்து கீழே விழும் காட்சிகள் அதில் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த நேரத்தில் தேரில் ஆச்சாரியர்கள் அமர்ந்திருந்ததாக டெக்கன் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திடுக்கிட்டனர். தேரை இழுக்கும் கயிறு திடீரென அறுந்ததன் தேரின் மேற்பகுதி இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், மற்ற தேரோட்டம் எவ்வித தடையுமின்றி அமைதியாக நிறைவு பெற்றது.

இச்சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது நிம்மதியாகும் செய்தியாகும். பப்பனாடு கோவில், மங்களூருவிலிருந்து சுமார் 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் பிரம்மரதோத்ஸவ விழா நடைபெறும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.