உத்தரப்பிரதேசம் அஜீஸ்பூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் தலித் மாப்பிள்ளை விஷால் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தி, சாதியை பற்றி பேசி அவமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 6 அன்று நடந்த இந்த சம்பவத்தில், டாக்டர் அம்பேத்கர் மற்றும் கௌதம் புத்தரின் புகைப்படங்களை பார்த்ததும் கோபமடைந்த குற்றவாளிகள், புகைப்படங்களை உடைத்து, விஷாலின் தலையில் துப்பாக்கியால் தாக்கியதாக அவரது தந்தை முகேஷ் குமார் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான புகார் மார்ச் 7-ஆம் தேதி அளிக்கப்பட்டதோடு, போலீசார் மார்ச் 10-ஆம் தேதி மட்டுமே வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் விஷ்ணு சர்மா மற்றும் அவரது மகன் மீது பாரதிய ந்யாய சாஹிதா பிரிவுகள் மற்றும் SC/ST தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக உதவி ஆணையர் தேவேஷ் தெரிவித்துள்ளார்.