சூரத் நகரத்தில் பங்கு சந்தை இழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சவுகார் பஜார் பகுதியில் வசித்து வந்த விபுல் பிரஜாபதி, அவரது மனைவி சரிதா மற்றும் 12 வயது மகன் வ்ரஜ் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை இரவு சூரத் நகரில் உள்ள கால்தேஷ்வர் கோவிலுக்கு சென்று அருகிலுள்ள தபி நதியில் பாய்ந்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், இந்த தற்கொலை சம்பவத்திற்கு பங்கு சந்தையில் ஏற்பட்ட நட்டமே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. மேலும், மனைவி சரிதா மனநலம் தொடர்பான சிகிச்சையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து காம்ரேஜ் போலீஸ் நிலைய ஆய்வாளர் ஏ.டி. சாவ்டா கூறுகையில், “வெள்ளிக்கிழமை காலை ஒரு வழிப்போக்கர் ஒரு உடலைப் பார்த்து எங்களைத் தொடர்பு கொண்டார். பின்னர் மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன” என தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெறு வருகிறது.